Published on 20/05/2020 | Edited on 20/05/2020
நீதிபதி வேலுமணி முன்பு மணல் கடத்தல் வழக்கில் முன் ஜாமீன் கேட்டு 6 பேரின் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில் கூடுதல் பப்ளிக் பிராசிகியூட்டர் ஜோதிகுமார் ஆஜராகி, முன்ஜாமீன் நிபந்தனைத் தொகையை முதல்வரின் கரோனா நிதி உதவித் திட்டத்திற்கு வழங்க கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதை நீதிபதி ஏற்றுக் கொண்டு, அரசு வக்கீல் கூறியபடி மணல் திருடப்பட்டதாக கூறப்படுவதில், ஒரு யூனிட்டுக்கு ரூ.15 ஆயிரம் வீதம், முதலமைச்சர் கரோனா நிதி திட்டத்திற்கு மனுதாரர்கள் வழங்கி முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டார்.