Skip to main content

பத்திரிகையாளர்களை பற்றி தவறாக பேசினார் ஸ்டாலின்! பொய் பிரச்சாரம் செய்த எடப்பாடி!!

Published on 07/04/2019 | Edited on 09/04/2019

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியை அதிமுக தனது கூட்டணிக் கட்சியான பாமகவுக்கு ஒதுக்கியதின் பேரில் பாமக வேட்பாளராக ஜோதிமுத்து களமிறக்கப்பட்ட இருக்கிறார். அதனடிப்படையி அமைச்சர் சீனிவாசன் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் தலைமையில் கூட்டணிக் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து  திண்டுக்கல்  பொதுக்கூட்டத்தில் வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார்.

 

அதன் பின் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி‌யோ....

 

esp

 

வழக்கம்போல் மோடியை புகழ்ந்து ஜெ.ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களையும் தற்போது தங்கள் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களையும் சலுகைகளையும் மக்களிடம் எடுத்துக் கூறி பாமக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார். அப்போது ஸ்டாலினைப் பற்றி பேசும்போது...‌ தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று ஸ்டாலின் கூறுகிறார். மதுரை தேர்தல் பிரச்சாரத்திற்கு ஸ்டாலின் சென்றபோது அங்கு அதிகாலையில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார் அதாவது வாக்கிங் சென்றார். அந்த அளவிற்கு சுதந்திரமாக ஸ்டாலின் சென்று இருக்கிறாரர் என்றால் அவர் ஒருவர் சான்றே போதும்.

 

 

ஆனால் திமுக ஆட்சியின்போது துணை முதல்வராக இருந்தும் இந்த ஸ்டாலின் மதுரை பக்கமே எட்டிப் பார்க்கவில்லை. அந்த அளவுக்கு சட்டம்  ஒழுங்கு சீர்கெட்டு இருந்தது. தற்போது அப்படி இல்லை சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்று பேசி கொண்டு இருக்கும்போதே அமைச்சர் சீனிவாசன் ஒரு சிலீப்பை கொண்டு வந்து எடப்பாடியிடம் கொடுத்தார். அதை படித்து பார்த்து விட்டு பேசிய எடப்பாடியோ... '"திண்டுக்கல் பிரச்சாரக் கூட்டத்திற்கு ஸ்டாலின் வந்தபோது பத்திரிகையாளர்களை பற்றி தவறாக பேசினார்  என்று சொன்னார்கள்.

 

esp

 

நாம் பத்திரிகையாளர்களை மதிக்க கூடியவர்கள் பத்திரிகையாளர்களுக்கு பல சலுகைகள் செய்து வருகிறோம். பத்திரிகையாளர்கள் முதுகெலும்பு போல் உள்ளவர்கள் என்று கூறி ஸ்டாலினுக்கு கண்டனம் தெரித்து விட்டு சென்றார்"

 

ஆனால் திண்டுக்கல்லில் ஸ்டாலின் தலைமையில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பத்திரிகையாளர்களை பற்றி ஸ்டாலின்  தவறாக பேசவே இல்லை மேடையின் கீழ் பத்திரிகையாளர்கள் அமர்ந்திருந்தபோது பின்னாடி இருந்த கட்சிக்காரர்கள் சத்தம் போட்டனர் அப்பொழுது பத்திரிகையாளர்களுக்கும், கட்சிக்காரர்களுக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது அதைக் கண்டு ஐபி செந்தில்குமார் மேடையில் இருந்து இறங்கி வந்து கட்சிக்காரர்களை சத்தம் போட்டு பத்திரிகையாளர்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என்று சொல்லி விட்டுப் போனார் இதுதான் நடந்ததே தவிர மற்றபடி ஸ்டாலின் பத்திரிகையாளர்களை தவறாக பேசவில்லை அப்படி ஒரு பொய்யான பிரச்சாரத்தை முதல்வர் எடப்பாடி படைப்பு பரப்பி வருகிறார் என்பது தான் உண்மை.

        

 

இந்தத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், மாவட்ட செயலாளர் மருதராஜ், ராஜ்மோகன், வெங்கடேஷ், பாரதிமுருகன், பிரேம் உள்பட கட்சிப் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்