தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் பெரியகுளம் நகராட்சி பகுதிகளில் கரோனா வைரஸ் தடுப்பு பணிகள் மற்றும் 144 ஊரடங்கு உத்தரவு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் பேசியபோது,
பெரியகுளம் நகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட 30 வார்டுகளிலும் 144 தடை உத்தரவு அமல்படுத் தப்பட்டுள்ளது. பெரியகுளம் நகராட்சி பகுதிகளில் அத்தியாவசிய மளிகை, காய்கறி, பழங்கள், இறைச்சி கடைகள் மற்றும் உணவகங்கள் தேநீர் நிலையங்கள், பேக்கரி போன்ற இதர அனைத்து விதமான கடைகள் அரசு மற்றும் தனியார் வங்கிகள் பொது நிறுவனங்கள் வணிக நிறுவனங்கள் மறு உத்தரவு வரும் வரை திறப்பதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அரசால் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அனைத்து தளர்வுகளும் தடைகளும் மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து முழுமையாக கடைப் பிடித்தால் மட்டுமே கரோனா நோய்த் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்று கூறினார்.
அதன்பின் பெரியகுளம் நகராட்சி பகுதிகளில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக் கையாக 144 ஊரடங்கு ஊரடங்கு தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் மாவட்ட எல்லையான காட் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள வாகன சோதனை சாவடி மற்றும் ஆய்வக பரிசோதனை மேற்கொள்ளும் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியின்போது பெரியகுளம் சார்பாக செல்வி சினேகா, சிறப்பு வருவாய் அலுவலர் தியாகராஜன், துணை இயக்குனர் செந்தில்குமார், பெரியகுளம் வட்டாட்சியர் ரத்னமாலா, நகராட்சி ஆணையாளர் அசோக் குமார் உள்பட சில அதிகாரிகள் கலந்து கொண்டனர்.