நியூட்ரினோ திட்ட விவகாரத்தில் சட்டத்தையும், தமிழக அரசின் நிலைப்பாட்டையும், மக்களையும் கொஞ்சம் கூட மத்திய அரசை கண்டிப்பதாக கூறியுள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நியூட்ரினோ திட்ட விவகாரத்தில் சட்டத்தையும், தமிழக அரசின் நிலைப்பாட்டையும், மக்களையும் கொஞ்சம் கூட மதிக்காமல் நியூட்ரினோ திட்டத்திற்கு சிறப்பு அனுமதி வழங்க மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ‘நிபுணர் மதீப்பீட்டு குழு’ முடிவெடுத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இத்திட்டத்தால் கதிர் வீச்சு அபாயம் இல்லை, வெடிமருந்து பயன்படுத்துவதால் பாதிப்பு ஏற்படாது எனவும், சிறப்புத் திட்டமாக எடுத்துக்கொள்ளப்பட்டதால் இனி புதிதாக சுற்றுச்சூழல் தாக்கீது அறிக்கையும், பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டமும் நடத்தத் தேவையில்லை எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.
இப்படி தமிழக அரசின் நிலைப்பாட்டை மதிக்காது, நியூட்ரினோ திட்டத்தைச் செயல்படுத்தியே தீருவோம் என மத்திய அரசு எடுத்துள்ள இம்முடிவு மாநில சுயாட்சி உணர்வை கடுமையாகப் பாதிக்கும். இந்தியக் கூட்டாட்சி தத்துவத்தையே கேள்விக்குறியாக்கும். இந்த நடவடிக்கையை தமிழக நலனில் அக்கறையுள்ள அரசியல் கட்சிகளும், தமிழ் உணர்வாளர்களும் கடுமையாக எதிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.