சீனா உள்ளிட்ட பல நாடுகளில் புதிய வகை பி.எஃப்.7 கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி அதன் பாதிப்பு இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மத்திய மாநில அரசுகள் இது குறித்த தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், கொரோனா அச்சம் மீண்டும் எழுந்துள்ளதால் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு, உள்துறை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார், சுகாதாரத்துறை இயக்குநர் போன்றோர் கலந்து கொண்டனர்.
சில தினங்கள் முன்பு மத்திய உள்துறை செயலாளர் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்த சுற்றறிக்கை குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.