Skip to main content

கரோனாவிற்கு ஈரோட்டில் பெண் உயிரிழப்பு...

Published on 24/06/2020 | Edited on 24/06/2020
corona in erode

 

இந்தியா முழுக்க கரோனா வைரஸ் அதிகமாக பரவி வரும் சூழ்நிலையில் தமிழகத்தில் இதன் பாதிப்பு அதிகமாக தொடர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் அதிக அளவு கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை கூடுதலாக வந்துள்ளது.

அதேபோல்  இறப்பு விகிதமும் கூடுதலாகி உள்ளது. இந்த நிலையில் இந்த வைரஸ் தொற்று கட்டுப்பாட்டு உள்ள மாவட்டத்தில் ஒன்றான ஈரோட்டில் தொடர்ந்து கரோனா வைரஸ் தொற்று அதிகமாகி வருகிறது. நாளுக்கு நாள் அதிகம் ஆகியும் வருகிற இந்த வைரஸை கட்டுப்படுத்த ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஈரோடு மாவட்ட எல்லைகள் முழுவதுமாக சீல் வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் இன்று ஈரோட்டில் இந்த வைரஸ் தொற்றில் ஒரு பெண் இறந்துள்ளார். ஏற்கனவே ஒரு முதியவர் இறந்த  நிலையில் மீண்டும் ஒரு பெண் இறந்துள்ளார். இப்படி கரோனா தாக்கத்தில் இறந்தவர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. இன்றுவரை ஈரோட்டில் 93 பேர் இந்த வைரஸ் தொற்று உள்ளவர்கள். அதில் இரண்டு பேர் இறந்துள்ளார்கள். மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் மிகவும் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். ஈரோட்டில் இந்த வைரஸ் கட்டுப்படுத்தப்படும் என நம்பிக்கையோடு பணியாற்றி வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்