Skip to main content

தேனி மாவட்டத்தில் 10 ஆயிரத்தை கடந்த கரோனா பாதிப்பு!

Published on 18/08/2020 | Edited on 18/08/2020
theni

 

 

தேனி மாவட்டத்தில் நேற்று மேலும் 155 பேருக்கு கரோனா தொற்று உறுதியானால் பாதிப்பு எண்ணிக்கை பத்தாயிரத்தை கடந்துள்ளது.

 

தேனி மாவட்டத்தில் மின்னல் வேகத்தில் பரவி வரும் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜூலை மாதத்தில் மட்டும் 4,300 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தின் இந்த 18 நாளில் மட்டும் 4,500 பேர் பாதிப்படைந்துள்ளனர். தினந்தோறும் 500க்கும் மேல் பாதிப்பு சந்தித்து வந்த தேனி மாவட்டத்தில் நேற்று முந்தினம் 206 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று காலை மாலை மேலும் புதிதாக 155 பேருக்கு தொட்டு உறுதி செய்யப்படவே மொத்த பாதிப்பு 10,064 ஆக உயர்ந்துள்ளது.

 

தேனி ஆயுதப் படை குடியிருப்பில் வசிக்கும் பெண் காவலர், பண்ணைபுரம் பேரூராட்சி டிரைவர், அரண்மனை புதூரை சேர்ந்த பொதுப்பணித் துறை டிரைவர், வீரபாண்டிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் நாலு செவிலியர்கள் ஆகியோருக்கு தொட்டு உறுதியாகி உள்ளது.

 

தேனி மாவட்டத்தில் அதிகபட்சமாக 45 பேருக்கும், கோடிகள்ளில் 27 பேருக்கும், பெரியகுளத்தில் 35 பேருக்கும், ஆண்டிபட்டியில் 28 பேர், கடமலை மயிலை பகுதியில் 8 பேர், சின்னமனூரில் 27 பேர், உத்தமபாளையத்தில் 15, கம்பத்தில் 25 பேருக்கு என தொற்று உறுதியானது. இதுவரை 1865 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெரியகுளத்தை சேர்ந்த 78 வயது மூதாட்டி, கூடழுரை சேர்ந்த 62 வயது ஆண், வெள்ளையம்மாள் புரத்தை சேர்ந்த 65 வயது மூதாட்டி ஆகியோர் நேற்று ஒரே நாளில் இறந்துள்ளனர். 

 

இப்படி நாளுக்கு நாள் தேனி மாவட்டத்தில் கரோனா அதிகரித்து வருகிறதே தவிர அதை கட்டுப்படுத்த அதிகாரிகள் சரிவர ஆர்வம் காட்டாததை கண்டு, பொதுமக்கள் தொடர்ந்து பீதி அடைந்து வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்