Skip to main content

கரோனா மருத்துவ உபகரணங்கள் வாங்க 50 லட்சம் ஒதுக்கீடு செய்த திருப்பூர் எம்.பி. 

Published on 25/03/2020 | Edited on 25/03/2020

 

உலகில் வாழும் மனித உயிர்களுக்கு மரண அச்சத்தை ஏற்படுத்தி கொடுங்கோலனாக எல்லா நாடுகளிலும் ஊடுருவிய கரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் தமிழகத்திலும் மனிதர்களின் அன்றாட இயக்கத்தை நிறுத்தியதோடு பல உயிர்களை காவு வாங்க வியாபித்துள்ளது. மருத்துவப் போர் ஒருபுறம் நடந்து வருகிறது. அதேபோல் மத்திய மாநில அரசுகள் மக்களிடம் கேட்டுக்கொண்டபடி ஒவ்வொருவரும் அவரவர்கள் வீட்டில் தனித்து இருந்து இந்த வைரஸ் தொற்றை வரவிடாமல் தடுக்க போராடிக்கொண்டு உள்ளார்கள்.

 

Subbarayan



இதன் தொடர்ச்சியாக இந்த கரோனா வைரஸை தடுக்க அதற்காக பல்வேறு தரப்பிலும் முயற்சிகள் நடந்து வந்துள்ளது. இந்த நிலையில் திருப்பூர் நாடாளுமன்ற எம்.பி.யும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளருமான திருப்பூர் சுப்பராயன் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனைகளுக்கு வைரஸ் தொற்று கட்டுப்படுத்துவதற்காக மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு தனது தொகுதி நிதியில் இருந்து 50 லட்சம் ஒதுக்குவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே இத் தொகுதிக்கு உட்பட்ட பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியை கரோனா தடுப்பு சிறப்பு மருத்துவமனையாக அரசு அறிவித்துள்ளது ஆகவே அங்கு மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு எம்பி ஒதுக்கிய நிதி உதவும் என்கிறார்கள் அதிகாரிகள். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்