வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் தலா 18 செ.மீ, ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தில் தலா 17 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக கூறினார்.
அதேபோல் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யாது என்றும், மிக கனமழையே பெய்யும் என்றார். 4 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என்ற அறிவிப்பை திரும்பப்பெற்றது வானிலை ஆய்வு மையம். சென்னையில் இரு நாட்களுக்கு கனமழை தொடரும். விழுப்புரம், கடலூர், டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறினார். புதுச்சேரி மாநிலத்திலும் கனமழை பெய்ய வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்ச்சந்திரன் கூறினார். சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு நாளை வரை செல்ல வேண்டாம் என எச்சரிக்கை.