இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகள் கொரோனாவை தடுப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
டெல்லியில் கரோனாவால் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இன்று ஒருநாள் மட்டும் டெல்லியில் 1,396 பேருக்கு கரோனா பாதி உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மராட்டிய மாநிலத்தில் 660 பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்திலும் ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 493 லிருந்து 502 ஆக அதிகரித்துள்ளது. வீட்டு தனிமை மற்றும் மருத்துவமனைகளில் 3,048 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில், 329 பேர் டிஸ்சார்ச் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் 136, கன்னியாகுமரி-52, கோவை-42, திருவள்ளூர்-28, செங்கல்பட்டு-28, சேலம் 27 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பூரைச் சேர்ந்த 84 வயது முதியவர் ஒருவர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். அவருக்கு இணை நோய்கள் இருந்தது தெரிய வந்துள்ளது.