Skip to main content

தமிழகத்தில் 2,000-ஐ கடந்த ஒருநாள் கரோனா பாதிப்பு!

Published on 30/06/2022 | Edited on 30/06/2022

 

பரக

 

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகக் குறைந்திருந்த கரோனா பாதிப்பானது சில நாட்களாக அதிகரித்து பதிவாகி வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடங்களில் பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்த வண்ணம் இருக்கிறது. பல மாவட்டங்களில் கரோனா கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் துரிதமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் எனத் தமிழக மருத்துவத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

 

இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,827 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் 2069 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10,033 இருந்து 12,013 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 864 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். சென்னையில் மட்டும் ஒரே நாளில் 903 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று சென்னையில் மட்டும்  771 பேருக்கு கரோனா பதிவு செய்யப்பட்டிருந்தது. கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் இந்நிலையில் இதுதொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் நாளை அவசர ஆலோசனை நடத்த உள்ளார். 


 

சார்ந்த செய்திகள்