திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர் கடந்த 7ம் தேதி காலமானார். இதைத்தொடர்ந்து அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் திமுக சார்பில் கலைஞரின் புகழுக்கு வணக்கம் என்ற பெயரில் முக்கிய இடங்களில் புகழஞ்சலி கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. முதல் நிகழ்ச்சியாக திருச்சியில் இன்று (17ம் தேதி) கருத்துரிமை காத்தவர் கலைஞர் என்ற தலைப்பில் நடைபெறுகிறது. திருச்சியில் கலைஞர் அறிவாலயத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.
நேற்று திடீர் என பி.ஜே.பி கட்சியின் நிறுவனர் வாஜ்பாய் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலன்இன்றி காலமானதை அடுத்து அவருடைய உடலுக்கு இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள டெல்லிக்கு நேற்று இரவு கலந்து கொண்டு இன்று காலை சென்னை வருகிறார். இன்று மாலை திருச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் திட்டமிட்டபடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழக ஊடகத்துறை வல்லுநர்கள் இந்து என்.ராம், நக்கீரன் கோபால் , அருண்ராம், பகவான்சிங், வைத்தியநாதன், , ஆர்.அருணன், சமஸ், குணசேகரன், ராஜா திருவேங்கடம், திருமாவேலன், ஆர்.முத்துக்குமார், ஆர்.மணி ஆகியோர் கலந்து கொண்டு கலைஞருக்கு புகழஞ்சலி செலுத்துகின்றனர்.
இந்த கூட்டத்திற் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், தமிழ்புலவர்கள், தமிழ் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்துகிறார்கள்.
இந்த கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு, வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் ஆகியோர் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஊடகவல்லுநர்களை ஒருங்கிணைக்கும் பணியினை முன்னால் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு செய்து வருகிறார்.