Published on 26/03/2018 | Edited on 26/03/2018
தூத்துக்குடியிலுள்ள தாமிர உருக்காலையான ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்தினை நிறுத்தக்கோரியும், ஆலையினை நிரந்தரமாக மூடக்கோரியும் அ.குமாரரெட்டியாபுரம் மக்கள் தொடர் போராட்டத்தினை நடத்திய நிலையில், மாநகரில் உள்ள தன்னார்வலர்கள், வணிகர்கள் இணைந்து ஸ்டெர்லைட்டிற்கு எதிராக கடையடைப்பினையும், கண்டனப் பொதுக்கூட்டத்தினையும் சனிக்கிழமையன்று நடத்தினர்.
பெரிய அளவில் வெற்றிப்பெற்ற ஆலைக்கெதிரானப் போராட்டத்தில் தற்பொழுது கல்லூரி மாணவர்கள் இணைந்துள்ளனர். இன்று காலையில் கல்லூரிக்கு வந்த வ.உசி.கல்லூரி மாணவர்கள் வகுப்புக்களுக்கு செல்லாமல், வாயிலிலேயே நின்றுக் கொண்டு, ஒன்றிணைந்து ஸ்டெர்லைட்டிற்கு எதிராக கோஷங்களை எழுப்பிப் போராடி வருகின்றனர். இதனால் பரப்பரப்பு நிலவி வருகின்றது.