திருச்சி மேலசிந்தாமணி, கொசமேட்டுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் அலெக்ஸ் பாலு(54). இவர் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில், அவர் சத்திரம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது கீழ சிந்தாமணி பூசாரி தெருவைச் சேர்ந்த அக்பர் கான்(33), அலெக்ஸ் பாலுவிடம் வேண்டுமென்றே தகராறு செய்து இரும்பு கம்பியால் அலெக்ஸ் பாபுவை தாக்கி உள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் வழக்குப் பதிவு செய்து அக்பர் கானை கைது செய்தார். கோட்டை போலீசார் ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் அக்பர் கானை 22 முறை கைது செய்துள்ளனர். இந்நிலையில், தற்போது 23வது முறை கைது செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.