மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த தற்போது இங்கிலாந்தில் பணியாற்றி வரும் மோகன்தாஸ் - தேவி தம்பதியினரின் மகள் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஐஸ்வர்யா வயது 13 இங்கிலாந்து நாட்டின் வேல்ஸ் பகுதியில் இந்த ஆண்டு முதல் படித்து வருகிறார். 8 ஆம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் படித்து கடந்த ஏப்ரல் மாதம் இங்கிலாந்து பயணமானார்கள்.
அங்கு சென்று பள்ளிப் படிப்புடன் விளையாட்டில் ஆர்வம் செலுத்தி கோ ஸ்போர்ட்ஸ் பயிற்சி பள்ளியில் இணைந்து துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்றார். இவர் ஜூலை 6, 7 தேதிகளில் கோ ஸ்போர்ட்ஸ் சேம்பியன் ஷிப் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று இரண்டு வெள்ளிப்பதக்களை வென்று பின்னர் ஜூலை 13 அன்று வேல்ஸ் சுவான்ஷி நகரில் நடைபெற்ற பிரிட்டிஷ் ஒப்பன் சேம்பியன் ஷிப் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று ஒரு தங்கப் பதக்கம் ஒரு வெள்ளிப் பதக்கம் வென்று வேல்ஸ் பகுதியில் இரண்டாம் நிலையில் உள்ளார்.
ஒரு வேளை இவர் பிரிட்டன் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு தேர்வு செய்யபட்டால் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் சாதிப்பதற்கு சாதி மதம் இனம் மொழி ஒரு தடையாக இருக்க முடியாது என்பதற்கு இதோ 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஐஸ்வர்யா சாட்சி வாழ்த்துக்கள் மகளே இன்னும் பல வெற்றி மேல் வெற்றி பெற்று வெற்றித் திருமகளாக வளம் வந்து உன் பெற்றோரும் ஊரும் நாடும் போற்ற வாழ்த்துகிறேன்
என் தந்தை சி ஏகாம்பரத்தின் உற்ற நண்பர்களில் ஒருவர் சாலவாக்கம் நாகப்பன் அவரின் மகன்தான் மோகன். இவரின் தாய் சொக்கம்மாள் சாலவாக்கம் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர். இவர்களின் மற்றொரு மகன் தம்பி சந்துரு அமெரிக்கா பெர்முடாவில் பணியாற்றி வருகிறார். மோகன் என் உடன் பிறந்த சகோதரர் தம்பி காளி என்கிற அன்புச் செல்வனுடன் சாலவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்றவர் ஆவார்.
இவர்களின் படிப்பிற்கு பின்னர் என்னுடன் சில ஆண்டுகள் இருந்தனர் இவர்களின் வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்று சிறிய வழிகாட்டுதலை வழங்கி உடனடியாக தற்காப்புக் கலை, தட்டச்சு, ஓட்டுநர், ஐரோப்பிய மொழி என்று படிக்க சொல்லி புதுச்சேரி அனுப்பி வைத்தேன். அதில் தேர்ச்சி பெற்று தம்பி காளி என்கிற அன்புச் செல்வன் நவநாகரீககத்தின் தொட்டில் பிரதேசமான பிரான்ஸ் நாட்டிற்கும், மோகன் அமெரிக்காவிற்கும் பணியாற்ற சென்று பின்னர் இங்கிலாந்து நாட்டில் தற்போது பணியாற்றி வருகின்றார்.
பழமையை மறவாமல் அவ்வப்போது தொலைபேசியில் அழைத்து கடந்த கால பசுமை நிறைந்த நினைவுகளை அசை போடுவார். தன்னுடைய உயர்வுக்கு காரணமானவர்களை மறவாமல் நினைவு கூறுவார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.