Skip to main content

கட்டாய அடையாள அட்டை; பீதியில் அரசு ஊழியர்கள்

Published on 28/02/2020 | Edited on 28/02/2020

தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் புரோக்கர்கள் யார் என்று தெரியாத வண்ணம் இரண்டு பேரும் கலந்துகொண்டு இருப்பார்கள்.

பெரும்பாலான அரசு பணிகளுக்கு அரசு ஊழியர் அல்லாத தனிநபர்களை ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு வைத்திருக்கிறார்கள். அவர்களை வைத்து பெரும்பாலான வேலைகளை செய்து வருகிறார்கள் அரசு ஊழியர்கள். அந்தத் தனி நபருக்கு சம்பளமாக அரசு ஊழியர் வாங்கும் சம்பளத்தில் இருந்திருக்கிறார்கள்.

இந்தநிலையில் அரசு ஊழியர்கள் கண்டிப்பாக புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அணியவேண்டும் இல்லை என்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

 Compulsory identification card; Civil servants in panic

 

பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் சுவர்ணா அனைத்து மாவட்ட கலெக்டர் துணை செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள உயரதிகாரிகள்,  டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்.

அதில் அரசு ஊழியர்கள் கண்டிப்பாக அடையாள அட்டை அணிய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை 17 தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவில் 60 நாட்களுக்குள் தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இதனடிப்படையில் தமிழக அரசு அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. ஆனால் அரசு ஊழியர்கள் பலர் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அணிவதில்லை என்று புகார் வந்துள்ளது.

இது தவறான நடவடிக்கையாகும் அதனால் அந்தந்த துறை தலைவர்கள் தங்கள் துறையின் கீழ் பணியாற்றும் அரசு ஊழியர்கள் பணியின்போது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அடைவதை உறுதி செய்ய வேண்டும் அப்படி அணியாதவர்கள் மீது துறைத்தலைவர்கள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த பிரிவு அடையாள அட்டை நிபந்தனையாக அரசு அலுவலக அதிகாரிகள் பீதியில் இருக்கிறார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்