Skip to main content

"எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை"- டிடிவி.தினகரன்!

Published on 23/05/2021 | Edited on 23/05/2021

 

 

complete lockdown coronavirus tn govt ammk chief ttv dhinakaran tweets

அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தமிழகம் முழுவதும் கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டத்தை பார்க்கும் போது கரோனா பாதிப்பு இன்னும் அதிகரிக்குமோ என்ற அச்சமும்  கவலையும் ஏற்படுகிறது. நோயின் பாதிப்பு அதிகமாகிறது என்று சொல்லிவிட்டு, எல்லாக் கடைகளையும் ஒன்றரை நாள் முழுமையாக திறக்க எப்படி அனுமதித்தார்கள்?

complete lockdown coronavirus tn govt ammk chief ttv dhinakaran tweets

சிறப்பு பேருந்துகளை இயக்கும் அவசர முடிவை எடுத்தது ஏன்? நகரங்களில் இருக்கும் அதிக பெருந்தொற்று  பாதிப்பு எல்லா ஊர்களுக்கும் பரவி விடாதா? ஏற்கனவே காலை 10.00 மணி வரை கடைகள் திறந்து இருந்த நிலையில், அதன் பிறகு அவசியமின்றி வெளியில் வந்தவர்களை முழுமையாக கட்டுப்படுத்தாமல்,....

complete lockdown coronavirus tn govt ammk chief ttv dhinakaran tweets

 

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சரியான  திட்டமிடுதல் இன்றி இப்படி குழப்புவது ஏன்? கடந்த ஆட்சியாளர்கள் செய்த அதே தவறுகளை தற்போதைய தமிழக அரசும் செய்வது எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை.

 

இதன் பிறகாவது ஆட்சியாளர்கள் பொறுப்போடு நடந்து கொள்வார்களா? மக்களும் மிகுந்த கவனத்தோடு நடந்துகொண்டு தாங்களும் பாதிக்கப்படாமல், மற்றவர்களும் பாதிப்படைவதற்கு காரணமாகிவிடாமல் இருந்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்." இவ்வாறு ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

சார்ந்த செய்திகள்