Skip to main content

ஊரடங்கு நீட்டிப்பா? - முதல்வர் இன்று ஆலோசனை!

Published on 22/05/2021 | Edited on 22/05/2021

 

coronavirus prevention cm mkstalin discussion with medical expert team and mlas team

 

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், மருத்துவ நிபுணர் குழுவுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (22/05/2021) காலை 10.00 மணிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். அதைத் தொடர்ந்து, அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர் குழுவுடன் தமிழக முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையில் சி. விஜயபாஸ்கர், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன் உட்பட 13 சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.

 

தமிழகத்தில் தற்போதுள்ள கூடுதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நாளை மறுநாள் (24/05/2021) நிறைவடையும் நிலையில் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.

 

மருத்துவ நிபுணர் குழு மற்றும் அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர் குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் தமிழக அரசு இன்று மாலையே முழு ஊரடங்கு நீட்டிப்பா, இல்லையா என்பது குறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

தற்போதைய சூழலில் தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு 36,000த்தை கடந்துள்ளதால், கரோனாவைக் குறைக்கக் கட்டுப்பாடுகளை அதிகரித்து, முழு ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்புள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்