Skip to main content

'துன்ப துயரத்தை வேடிக்கை பார்க்கும் கருவி மத்திய அரசு' - கம்யூனிஸ்ட் கட்சி கருப்புக்கொடி ஆர்பாட்டம்

Published on 19/05/2020 | Edited on 19/05/2020

 

 Communist Party's black flag demonstration



மத்திய பா.ஜ.க. மோடி அரசு கரோனா எனும் இந்த கொடிய காலத்தில் மக்களின் வாழ்வாதாரம் பற்றிய சிந்தனையில்லாமல் சொந்த நாட்டில் வாழும் கோடிக்கணக்கான மக்களை நடு வீதியில் அலையவிட்டு, அவர்களின் துன்ப துயரங்களை வேடிக்கை பார்க்கும் கருவியாக மாறிவிட்டது என பா.ஜ.க அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகள் வைத்து இன்று இந்தியா முழுக்க இந்திய கம்யூனிஸ்ட்கட்சியின் சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

பா.ஜ.க. அரசுக்கு கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்துள்ள  கோரிக்கைகள்..

1.கரோனா  கால நெருக்கடிகளை சமாளிக்க தொழிலாளர்கள் அனைவரும் ரூ 10,000 நிவாரணம் வழங்கு,

2.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தை சிதைக்காதே,

3. புலம் பெயர்ந்த தொழிலாளர் அனைவரும் பாதுகாப்புடன் அவரவர் ஊர் திரும்ப நடவடிக்கை எடு,

4. பொது விநியோக திட்டத்தில் நிபந்தனைகள் இல்லாமல் அனைத்து பொருட்களையும் வழங்கிடு,

5.தொழிலாளர் நல சட்டங்களை சீர்குலைக்காதே,

6.சிறு குறு தொழில் கடனில் மூன்று மாத தவணை தொகையை தள்ளுபடி செய்,


7.விவசாயிகளின் கடன்களை முழுமையாக ரத்து செய் கொரோனா கால இழப்புகளுக்கு நஷ்ட ஈடு வழங்கு!

8. ஓய்வுதியம் பெறுவோர்  முதியோர் விதவை மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா கால  நிவாரண உதவிகளை வழங்கிடு,

9.டாஸ்மாக் மதுபான கடைகளை திறந்து நோய் தொற்றை பரப்பாதே,
 

 

என்ற 9 கோரிக்கை களை முன் வைத்து இந்த கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நாடு முழுக்க நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, பெருந்துறை, சத்தியமங்கலம், தாளவாடி என 27 இடங்களிலும் தமிழகம் முழுக்க நூற்றுக்கணக்கான ஊர்களில் கருப்புக்கொடி ஆர்பாட்டம் நடத்தினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்