Skip to main content

சோமனூர் விபத்து – சூலூர் பேருந்து நிலையத்திற்கு இரும்பு தூண்கள்!

Published on 15/09/2017 | Edited on 15/09/2017


சோமனூர் விபத்து – சூலூர் பேருந்து நிலையத்திற்கு
 இரும்பு தூண்கள்!
 
கோவை சூலூர் தொகுதிக்குட்பட்ட சோமனூர் பேருந்து நிலையம் திடீரென இடிந்து விழுந்தது. இடிபாட்டில் சிக்கியதில் மூன்று பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக  ஐ ஏ எஸ் ககன்தீப் சிங் தலைமையில் ஒரு நபர் விசாரணை குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. 

இந்நிலையில் சோமனூர் பேருந்து நிலையத்தை போலவே கட்டப்பட்டு உள்ள , சூலூர் பேருந்து நிலைய மேற்கூரை விழாமல் தடுப்பதற்கு கம்பிகள் மூலமாக தூண்கள் அமைக்கப்பட்டு உள்ளது. தற்காலிகமாக அமைக்கப்பட்டு உள்ள தூண்களை போல நிரந்தரமாக தூண்கள் அமைக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்து உள்ளனர்.

சோமனூர் விபத்து சம்பவத்ததையடுத்து , அசம்பாவிதத்தை தடுக்கும் வகையில் சூலூர் பேருந்து நிலையத்தில் உள்ள மேற்கூரைக்கு கம்பி மூலமாக தூண்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

- அருள்

சார்ந்த செய்திகள்