தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விதமாக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி நீதிமன்றம் அருகே, பிஷப்ஹீபர் கல்லூரி வரலாற்று துறையின் மாணவர்கள் சார்பில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள 80வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், முதல் தலைமுறை வாக்காளர்கள் 100சதவீதம் வாக்களிக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதாகைகள் ஏந்தி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் பிஷப்ஹீபர் கல்லூரியின் வரலாற்று துறை தலைவர் பெமிளா அலெக்சாண்டர், கெளரவ தலைவர் அருளானந்த், எலிசபெத், உதவி பேராசிரியர்கள் அங்கேலஸ்வரி, மனுநீதி, நிறைமதி மற்றும் ஜெஸ்டின் உட்பட 50க்கு மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.