கல்லூரி மாணவி தற்கொலை - உறவினர்கள் சாலை மறியல்!
திண்டுக்கல் மாவட்டம், பழனிசாலை முத்தனம்பட்டியில் பிஎஸ்என்ஏ கல்லூரி உள்ளது. இங்கு சிவகங்கை மாவட்டம் வண்டியூரை சேர்ந்த பரணி என்பவரது மகள் தாரணி இவர் பி.இ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் (26.09.17) அதிகாலை கல்லூரி விடுதி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் இவர் தற்கொலையில் மர்மம் இருப்பதாகவும், அவர் இறப்பிற்கு நீதி விசாரணை கேட்டு மாணவி தாரணியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் போலீசார் வந்து கலைத்ததை தொடர்ந்து பிஎஸ்என்ஏ கல்லூரி முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் மாணவி தாரணி இறப்பிற்கு ஆதரவாக அனைத்திந்திய மாதர் சங்கம் மற்றும் மாணவர் அமைப்புகள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
- சக்தி