புதுக்கோட்டை பேராசிரியர்கள் போராட்டத்தால் கல்லூரிக்கு விடுமுறை
நீட்டுக்காக மாணவர்கள் அரசியல் கட்சிகள் ஒரு பக்கம் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையி்ல பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி பேராசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மாணவர்கள் போராட்டத்திற்காக விடுமுறை விடப்பட்டு வந்த நிலையில் பேராசிரியர்கள் போராட்டத்தால் தற்போது விடுமுறை விடப்பட்டுள்ளது.
இரா.பகத்சிங்.