கலெக்டர், தாசில்தாருக்கு சம்பளம் வழங்க தடை விதித்தது சென்னை ஐகோர்ட்
மாதவரம் வட்டாட்சியர் அலுவலத்திற்கான வாடகை கட்டிடத்தின் ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை வருவாய் துறை செயலாளர், திருவள்ளுர் ஆட்சியர், மாதவரம் வட்டாட்சியர் ஆகியோருக்கு ஊதியம் வழங்க தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளுர் மாவட்டம் மாதாவரம் தாலுகா அலுவலகத்திற்காக ராசிமண்டபத்தில் உள்ள பரிதா சவுகத் என்ற 65 வயது மூதாட்டிக்கு சொந்தமான வீடு வாடகைக்கு பேசப்பட்டது. மாதம் ஒரு லட்சத்து இருபதாயிரம் வாடகைக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகும் முன்பு வருவாய்துறை அலுவலர்கள் அந்த கட்டிடத்திற்குள் நுழைந்து கடந்த 2009 ம்ஆண்டு அலுவலகம் அமைத்துக்கொண்டதாக கூறபடுகிறது. வாடகை ஒப்பந்தம் கையெழுத்திடப்படாத நிலையில் பொதுப்பணித்துறை 98 ஆயிரத்து 925 ரூபாய் வாடைகை நிர்ணயித்தது. ஆனால் நிர்ணயித்த தொகையும் முறையாக வழங்கப்படவில்லை.
கடந்த ஆண்டு மே மாதத்ம் வரை வாடகை வழங்கப்படதால், அரசிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்பதால், பரிதா சவுகத் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார். வழக்கு தொடர்ந்த பிறகு வாடகை பாக்கி வழங்கப்பட்டாலும், ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை என்பதால் பரிதா மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். வைத்தியநாதன், கடந்த ஓராண்டாக வாடகை வழங்கப்படவில்லை என்பது தெளிவாகிறது, வாடகை ஒப்பந்தம் மேற்கொள்ளாமல் 65 மூதாட்டியை அலைகழித்து உள்ளனர், எனவே முப்பது நாட்களில் இந்த ஒப்பந்தத்தை புதுபிக்க வேண்டும் என்றும், 2016 மே மாதத்துக்கு பிறகான வாடகை பாக்கியை 30 நாளில் வழங்கவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். வாடகை ஒப்பந்தத்தை மேற்கொள்ளாமல் காலம்தாழ்த்திய திருவள்ளூர் மாவ்டட ஆட்சியர், தாலுகா தாசில்தார் ஆகியோரது ஊதியத்தையும், வாடகை வழங்கப்பட்டதா என்பதை கண்காணிக்காத வருவாய்துறை செயலாளரின் செப்டம்ர் மாத ஊதியத்தை ஒப்பந்தம் மேற்கொள்ளும்வரை வழங்க கூடாது என்றும், ஒப்பந்த மேற்கொண்ட பின்னரே ஊதிய பாக்கியை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இன்றும், நாளையும் சம்பள தேதி என்பதால் மூவருக்கும் சம்பளம் செலுத்துவதை தடுக்கும் வகையில் இந்த உத்தரவை உடனடியாக தலைமைச்செயலாளருக்கு அனுப்ப உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
சி.ஜீவா பாரதி