Skip to main content

மனித எலும்பை வாயில் கவ்வியபடி மயான கொள்ளை... களைகட்டிய சிவராத்திரி...!

Published on 22/02/2020 | Edited on 22/02/2020

கோவை சொக்கம்புதூர் சுடுகாட்டில் சிவராத்திரியை முன்னிட்டு மயான கொள்ளை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சுடுகாட்டில் மகாசக்தி மாசாணி அம்மன் மண் உருவத்தை சிதைத்து அதில் இருந்து மனித எலும்பை வாயில் கவ்வியபடி நள்ளிரவில் ஆக்ரோசமாக மயான கொள்ளை நிகழ்ச்சியானது நடைபெற்றது.
 

Coimbatore Shivaratri Festival

 

 

சிவராத்திரியை விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் கோவை சொக்கம்புதூர் மயானத்தில் மயான கொள்ளை நிகழ்ச்சியானது நடத்தப்படுவது வழக்கம். சொக்கம்புதூர் மயானத்தில் களிமண்ணால் அமைக்கபட்ட மாசாணியம்மன் உருவத்தை வைத்து மேளதாளம் முழங்க நள்ளிரவு பூசைகள் நடத்தப்பட்டது. கையில் அரிவாள், சூலாயுதம் போன்ற ஆயுதங்களுடன் மயான பூசையில் ஈடுபடும் பூசாரி மகாசக்தி மாசாணியம்மனின் களி மண் உருவத்தை சுற்றி  ஆக்ரோசமாக நடனமாடியபடி பூசை செய்தார்.

இதைதொடர்ந்து மாசாணியம்மனின்  இருதயத்தியில் இருந்து கைபிடி மண்ணை எடுத்து , அதில் இருந்து மனித எலும்புகளை எடுத்து வாயில் கடித்தபடி  மயான கொள்ளை நிகழ்ச்சியில் பூசாரி ஈடுபட பக்தர்கள் ஆரவாரத்துடன் மாயன கொள்ளை நிகழ்ச்சியை நள்ளிரவில்  கண்டு பரவசமடைந்தனர். பின்பு மகாசக்தி மாசாணியம்மனின் உருவத்தின் இருதய பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை  சொக்கம் புதூரில் உள்ள மகாசக்தி மாசாணியம்மன் கோவிலுக்கு கொண்டு சென்று அங்கு அந்த மண்ணை  வைத்து பூசை செய்தனர் . நள்ளிரவில் நடைபெறும் இந்த மயான கொள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வழிபட்டால் நினைத்த காரியங்கள்  நடக்கும் என்பது சொக்கம்புதூர் பகுதி மக்களின் நம்பிக்கை. இதே போன்று கோவையில் உள்ள பல்வேறு கோவில்களில் சிவராத்திரியை முன்னிட்டு நள்ளிரவு பூசைகளானது  நடத்தப்பட்டது குறிப்பிடதக்கது.

 

 

சார்ந்த செய்திகள்