Published on 01/10/2021 | Edited on 01/10/2021
கோவையில் இருந்து மன்னார்குடிக்கும், மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, “கோவை - மன்னார்குடி சிறப்பு விரைவு ரயில் அக்டோபர் 7ஆம் தேதி முதல் தினமும் இரவு 12.30 மணிக்கு கோவையிலிருந்து புறப்பட்டு காலை 07.40 மணிக்கு மன்னார்குடியை சென்றடையும். மன்னார்குடியில் இருந்து தினமும் இரவு 08.25 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில், காலை 04.45 மணிக்கு கோவையைச் சென்றடையும்.
மதுரை - ராமேஸ்வரம் இடையே அக்டோபர் 7ஆம் தேதி முதல் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும். ராமேஸ்வரத்தில் காலை 05.40 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில், காலை 09.30 மணிக்கு மதுரை வந்தடையும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.