கோவை ஆர்.எஸ்.புரம் டி.வி. சாமி ரோட்டில் உள்ள கிழக்கு பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்பவர் ரவிச்சந்திரன். இவரது 19 வயது மகள் சுபஸ்ரீ. நீட் தேர்வு எழுதுவதற்கு கடந்த இரண்டு வருடங்களாய் தனியார் மையத்தில் பயிற்சி எடுத்து வந்தார். கரோனோ காலம் என்பதால் நீட் தேர்வு செப்டம்பர் மாதத்திற்கு தள்ளி போடப்பட்டு விட்டதால் தன்னால் தேர்வு சரியாக எழுத முடியுமா? என குழம்பிப் போனார்.
நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டதால், இன்னும் பயம் கூடி விட்டது சுபஸ்ரீக்கு. இந்த நிலையில் தான் சுபஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாள்.
ஏற்கனவே நீட் தேர்வு எழுதி தோற்று விட்டதால் இந்த தற்கொலை முடிவை சுபஸ்ரீ எடுத்து விட்டதாக கூறப்படுகிறது. சுபஸ்ரீ தற்கொலை செய்து கொண்ட தகவல் ஆர்.எஸ். புரம் போலீசாருக்கு தெரிய வந்ததும், சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.