கோவை மாவட்ட நிர்வாகத்தின் மெத்தனப்போக்கால் இடிந்துவிழுந்த மேற்கூரை- 5 பேர் உயிரிழப்பு
கோவை மாவட்டம் சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை திடீரென் இடிந்து விழுந்ததில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கோவை மாவட்டம் சோமனூரில் உள்ள பேருந்து நிலைய மேற்கூரை விரிசல் விட்ட நிலையில் இருந்துள்ளது. இதுகுறித்து இரண்டு மாதங்களுக்கு முன்னரே மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. சமீபகாலமாக கோவை பகுதியில் கனமழை பெய்து வருவதால், ஏற்கனவே விரிசல் விட்டிருந்த கட்டிடம் இன்று காலை திடீரென இடிந்து விழுந்தது.
இதில், கட்டிட இடிபாடுகளில் சிக்கி ஐந்து பேர் பரிதாபமாக உயிழந்துள்ளனர். மேலும் சிலர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியிருப்பதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.