Skip to main content

கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சர் நியமனம்

Published on 06/07/2023 | Edited on 06/07/2023

 

coimbatore acting minister appointed tamilandu govt

 

தமிழக அமைச்சர்கள் சிலரை சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து அந்தந்த மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும் பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும் இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று மற்றும் அவசரக்கால பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும் வருவாய் மாவட்ட வாரியாக அமைச்சர்கள் பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

 

அந்த வகையில் கோயம்புத்தூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி செயல்பட்டு வந்தார். இந்நிலையில் இவர் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயர்நீதிமன்ற அனுமதியோடு சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.

 

இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமியை பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ள வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அனைத்துத் துறைகளை சார்ந்த அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து திட்டப் பணிகளை துரிதப்படுத்துதல், நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு சென்றடைவதை கண்காணித்தல் மற்றும் தேவையான ஆலோசனைகள் வழங்க உள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்