Skip to main content

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம்! (படங்கள்)

Published on 20/12/2021 | Edited on 20/12/2021

 

 

சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் தமிழக மாவட்டங்களில் செயல்படும் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றை இணைத்து தமிழ்நாடு வங்கியை உருவாக்க வேண்டும் என்று பல வருடங்களாக கோரிக்கை வைத்து தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.

 

இக்கோரிக்கை சம்பந்தமாக பல கடிதங்கள் அரசு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு அனுப்பப்பட்டது. சமீபத்தில் பாரத ரிசர்வ் வங்கியும் இத்தகைய வங்கிகளை ஒருங்கிணைத்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.

 

தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 1200 கிளைகளோடு செயல்பட்டு வரும் மாநில மத்திய கூட்டுறவு வங்கிகள் பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் அடித்தட்டு மக்களுக்கும் விவசாய பெருமக்களுக்கும் மகத்தான சேவை செய்து வரக்கூடிய  இவ்வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கி உருவாக்க கோரி கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் தமிழ்நாடு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தர்ணா போராட்டம் நடத்தினர்.

 

 

 

சார்ந்த செய்திகள்