Published on 20/01/2023 | Edited on 20/01/2023

தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை கு.ராமகிருஷ்ணனின் மனைவி வசந்தி காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை கு.ராமகிருட்டிணத்தின் மனைவி வசந்தி உடல்நலக்குறைவால் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறேன். இணையரை இழந்து தவிக்கும் ராமகிருட்டிணன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.