Skip to main content

ரஜினியை எம்.ஜி.ஆர் முகமாக மாற்ற துடிக்கிறது பாஜக - காங்கிரஸ் சிறுபான்மை காட்டம்!!

Published on 16/06/2019 | Edited on 16/06/2019


தமிழகம்மே குடிக்க தண்ணீரில்லாமல் தவிக்கிறது. இதனை தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு கண்டுக்கொள்ளவில்லை. வேலூர் மாவட்ட மக்கள் பகல், இரவு என தினம் தினம் மாவட்டத்தின் பலயிடங்களில் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்நிலையில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு என்னவென கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவின் தமிழக துணை தலைவர் அஸ்லம்பாஷா. 

 

BJP tyirng to change the face of Rajinikanth like MGR -congress minority  Structure


இதுப்பற்றி அவர் பேசும்போது, எடப்பாடி அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தியிருந்தால் குடிநீர் மேளாண்மையை உள்ளாட்சி நிர்வாகமே செய்திருக்கும். உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை, மாறாக குடிமரமாத்து பணி என்ற பெயரில் மக்கள் வரிப்பணம் கோடிக்கணக்கில் கொள்ளை போகிறது. அதில் கமிஷன் வாங்கிப்பழகிய எடப்பாடி அரசு உள்ளாட்சித்தேர்தலை நடத்த மறுக்கிறது. இந்த நிலை நீடித்தால் தமிழ்நாட்டில் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயமும் உள்ளது. மத்திய அரசின் புதிய கார்பரேட் கொள்கைப்படி பொதுவினியோகத்துறையை இழுத்து மூட மத்திய அரசின் நிர்பந்தந்திற்கு அடிபணிய அதிமுக அரசு தாயாராகிறது. தமிழகத்தில் எடப்பாடி அரசு தொடர்ந்து நீடித்தால் தமிழகத்தின் உரிமை மாத்திரமல்ல வளங்களும் கொள்ளை போகும்.

 

நிதிஆயோக் கூட்டத்திற்கு சென்ற எடப்பாடி எட்டுவழிச்சாலையை பற்றி மட்டுமே பேசுகிறார். காவிரி உரிமை பேசவில்லை. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு காவடி தூக்குகிறார். எதில் எல்லாம் கமிசன் வருமோ அந்த திட்டாங்களாக பார்த்து மத்திய அரசிடம் நிதி கேட்கிறார். ஆகவே எடப்பாடி அரசு நீடிப்பது தமிழகத்தை பாலைவனமாக்கும். பெருந்திரள் மக்கள் போராட்டத்தின் மூலம் இந்த அரசை உடனடியாக நீக்க வேண்டும்.

 

மத்திய அரசு தமிழத்திற்கு தரவேண்டிய நிதியை தரமறுக்கிறது. தமிழக அரசிற்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தி எடப்பாடி அரசை மிரட்டி அதிமுக விற்கு புதிய தலைமை உருவாக்க முயற்சிக்கிறது. ரஜினியை எம்ஜிஆர் முகமாக அதிமுகவில் திணிக்க எல்லா முயற்சிகளையும் பாஜக எடுக்கிறது. அதன் ஒருபகுதி தான் பாட புத்தகத்தில் ரஜினி இடம்பெற்று இருப்பது. தண்ணீர் பஞ்சம் உணவுப்பஞ்சம், இயற்கை வளங்களை பாதிக்கும் நாசகரத் திட்டங்கள் என தமிழகத்தின் மீது தினித்து மக்கள் சக்தி வாய்ந்த தலைவர்கள் இல்லை  அந்த இடத்திற்கு ரஜினி தகுதியானவர் என்னும் திட்டத்தையும் எடப்பாடியை வைத்தே மத்திய அரசு நிறைவேற்ற திட்டமிடுகிறது. அதனால் இதனை உடனடியாக தடுக்க வேண்டும். இல்லையேல் மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாக நேரிடும் என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்