மாநகராட்சிகளில் சிறந்த மாநகராட்சியாக சேலத்தை தேர்வு சேய்த்துள்ளது தமிழக அரசு. தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை நிவர்த்தி செய்தல், சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான வாழ்வியல் சூழலை ஏற்படுத்தி கொடுத்தல் போன்ற பிரிவுகளின் கீழ் சிறப்பாக செயல்பட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சிகளை தேர்வு செய்து முதலமைச்சர் விருது வழங்கப்படுகிறது. இதற்கு தமிழக அரசு 55 லட்சம் ருபாய் ஒதுக்கீடு செய்து தற்போது விருதுப் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
நடப்பாண்டுக்கான (2022-2023) சிறந்த மாநகராட்சியாக சேலம் மாவட்டத்தையும் சிறப்பான நகராட்சிகளாக ஸ்ரீவில்லிபுத்தூர், குடியாத்தம் மற்றும் தென்காசி என மூன்று ஊர்களை தமிழக அரசு தேர்வு செய்துள்ளது. இதன்படி, சேலம் மாநகராட்சிக்கு 25 லட்சமும், ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு 15 லட்சமும், குடியாத்தம் நகராட்சிக்கு 10 லட்சமும், தென்காசி நகராட்சிக்கு 5 லட்சமும் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.