கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கோபுராபுரத்தில் கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
அந்த ஊரை ஒட்டி அரசு மதுபான கடை உள்ளதால், மதுபிரியர்கள் குடித்துவிட்டு பள்ளி மாணவிகளிடம் தகாத வார்த்தைகளால் பேசுவதாலும், கேலி கிண்டல் செய்வதாலும் பெற்றோர்கள் மிகுந்த மனவேதனைக்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும் அரை நிர்வானத்துடன் மது பிரியர்கள் படுத்து கிடப்பதால் பெண்கள் அவ்வழியே செல்வதற்கே அச்சம் அடைகின்றனர் . இச்சம்பவம் தொடர் கதையாகி வருவதால், அப்பகுதி மக்கள் ஆலடி - விருத்தாசலம் செல்லும் சாலையில், டாஸ்மாக் கடையை மூடக்கோரி மண்னெண்ணய் கேனுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். டாஸ்மாக் கடையை மூட வேண்டும் இல்லை என்றால், மண்ணெண்ணை ஊற்றி கொளுத்தி கொள்வோம் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மண்ணெண்ணய் கேனை பறிமுதல் செய்து, சமரச பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டதால் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது .