டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையைக் கண்டித்து மன்னார்குடியில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய பா.ஜ.க. அரசு விவசாயிகளுக்கு எதிராக மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்துள்ளது. அந்த சட்டங்கள் விவசாயிகளை படுபாளத்திற்கு தள்ளிவிடும். விவசாயம், கார்பரேட்டுகளுக்கு போய்விடும். விவசாயிகள் கார்பரேட் கம்பனிகளிடம் அடகு வைக்கப்படுவர். எனவே, விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களைத் திரும்ப பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராடிவருகின்றனர்.
விவசாயிகளின் அறப்போராட்டத்தால் டெல்லியே ஸ்தம்பித்து நிற்கிறது. விவசாயிகளின் உணர்வுகளை புரிந்துகொள்ளாத மத்திய பா.ஜ.க. அரசு வேண்டும் என்றே விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திவருகிறது. என்று தெரிவித்து. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தலைமை தபால் நிலையம் முன்பு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தின்போது கண்டன முழக்கங்களும் எழுப்பினர்.