Skip to main content

சிறப்பாசிரியர் பணி நியமனத்தில் பகுதி நேர ஆசிரியர்களையே நியமிக்க கோரிக்கை

Published on 04/08/2017 | Edited on 04/08/2017

சிறப்பாசிரியர் பணி நியமனத்தில் பகுதி நேர
 ஆசிரியர்களையே நியமிக்க கோரிக்கை 

 தமிழக பகுதி நேர ஆசிரியர் சங்க ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் விடுத்துள்ள அறிக்கையில்,
’’தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம்பள்ளிக்கல்வி மற்றும் இதர துறைகளில் 2012 முதல் 2016 ஆம் ஆண்டிற்கான சிறப்பாசிரியர்கள்(உடற்கல்வி, இசை, ஓவியம், தையல்) காலிப்பணியிடங்களுக்கான நேரடி நியமன பணித்தெரிவிற்கு பணி நாடுநர்களிடமிருந்து18.08.2017 தேதிவரை இணையவழியாக (Online Mode) விண்ணப்பங்கள்வரவேற்கப்பட்டு 23.09.2017ல் எழுத்து தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதில், 6 ஆண்டு காலமாக இதே பாடப்பிரிவுகளில் அனைவருக்கும் கல்வி இயக்கம் வாயிலாக திட்ட வேலையில் 16549 பகுதி நேர பயிற்றுநர்கள் ரூ.7000 குறைந்த தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருவதில் 80 சதவீதம் இப்போது தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள பாட ஆசிரியர்களே என்பதை மாண்புமிகு தமிழக முதல்வர் மனிதாபிமானத்துடன் பணிநிரந்தரம் செய்து, அதன்பிறகு ஏற்படும்காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தவேண்டும். 

ஏழாவது ஊதியகமிஷனில் 16549 பகுதிநேர ஆசிரியர்களை சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த கோரிக்கைவைக்கப்பட்டுள்ளதை அரசுகவனத்தில் கொண்டு அதனை ஆவண செய்யவேண்டும்.

 சமீபத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர்கள் பணிநியமனம்செய்யப்படுவார்கள்  என அறிவித்ததை அரசாணையாக வெளியிடவேண்டும்.

அதைப்போலவே, மேனிலை பள்ளிகளில் 765 கணினி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்ற அறிவிப்பையும் வேலைவாய்ப்பு அலுவலகபதிவு மூப்பு அடிப்படையிலா அல்லது எழுத்து தேர்வுமூலமா என அரசாணையைவெளியிடவேண்டும். 

மேலும், 40000 கணினி ஆசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளார்கள் எனவும் கல்வி அமைச்சர் அறிவித்தபடி அதனை நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடவேண்டும்.’’

- சுந்தரபாண்டியன்

சார்ந்த செய்திகள்