Published on 17/12/2020 | Edited on 17/12/2020
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துக் கொண்ட வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத்திடம் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ) விசாரணை நடத்தி வருகிறார்.
சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத் கடந்த டிசம்பர் 14- ஆம் தேதி கைது செய்யப்பட்டு பென்னேரி கிளைச்சிறை சாலையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் பொன்னேரி கிளைச்சிறை சாலையில் அடைக்கப்பட்டிருந்த ஹேம்நாத்தை ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் அலுவலத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ விசாரணை நடத்தி வருகிறார். இதில் வரதட்சணை கேட்டு ஹேம்நாத் கொடுமைப்படுத்தினாரா என ஆர்.டி.ஓ. விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே 6 நாள் ஹேம்நாத்திடம் காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.