Skip to main content

தந்தை பெரியாரை அவமதித்த தெருச்சண்டை புகழ் வேட்பாளருக்கா உங்கள் ஓட்டு? -ப.சிதம்பரம்

Published on 10/04/2019 | Edited on 10/04/2019

சிவகங்கை பாராளுமன்றத் தொகுதியில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ்  -  தி.மு.க வேட்பாளரான தனது மகன் கார்த்தி சிதம்பரத்திற்காக ப.சிதம்பரம் எம்.பி. பொதுக் கூட்டங்கள் நடத்தி வாக்கு சேகரித்து வருகிறார். 

 

இந்த நிலையில் கீரமங்கலத்தில் மெய்யநாதன் எம்.எல்.ஏ தலைமையில் நடந்த பொதுக் கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசும் போது.. 

 

 

இந்திராகாந்தி காலத்தில் இருந்து தி.மு.க – காங்கிரஸ் கட்சிகள் 6 முறை கூட்டணி அமைத்து மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இந்த முறையும் நீங்கள் விரும்பினால் அந்த வெற்றியை பெறமுடியும். 

 

chithamparam election campaign in keeramangkalam

 

இந்தி பேசும் சில மாநிலங்களில் இருந்து பெற்ற வெற்றியை வைத்துக் கொண்டு இந்தி வெறியர்களான ஆர்.எஸ்.எஸ்சின் பிள்ளை பா.ஜ.க ஆட்சி அமைத்திருக்கிறது. மீண்டும் இந்தியை திணிப்பை கொண்டு வர முயன்று முதலில் சமஸ்கிருதம் கற்க வேண்டும் என்கிறது. சமஸ்கிருதம் கற்றுக் கொண்டு பூஜை செய்ய தான் போகலாம். இந்தியை எதிர்த்து நம் தமிழர்கள் உயிர்தியாகம் செய்தார்கள். மறுபடியும் கொண்டுவர முடியுமா?

 

 

இந்த தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அ.தி.மு.க வில் நின்று வெற்றிபெற்று பாராளுமன்றம் சென்றவர் யார் என்பது உங்களுக்கு தெரியுமா, அவர் பெயரோ முகமோ உங்களுக்கு தெரியுமா? ஆனால் இந்த முறை காங்கிரஸ் – தி.மு.க கூட்டணியில் யார் நிற்கிறார்கள் என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. கார்த்தி சிதம்பரம் தான் வெட்பாளர். அவரை எதிர்த்து யார் யார் போட்டியிடுகிறார்கள் என்பதும் உங்களுக்கு தெரியும்.

 

அதில் ஒருவர் தெருச்சண்டை புகழ் வேட்பாளர் ஒருவர் ( எச்.ராஜா) தமிழ்நாட்டில் தந்தை பெரியார் சிலையை உடைக்க வேண்டும், செருப்பால் அடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்த தெருச்சண்டை புகழ் வேட்பாளரை ஆதரிப்பீர்களா, ஓட்டுப் போடுவீர்களா? 

 

இந்தியாவின் முதல் பயங்கரவாதி கோட்சே.. முதல் பலி மகாத்மாகாந்தி. அந்த பயங்கரவாதி ஆர்.எஸ்.எஸில் வளர்ந்தவன். அந்த இயக்கத்தின் பிள்ளை தான் பா.ஜ.க. அந்த பிள்ளையை தான் தமிநாட்டில் பல்லக்கில் தூக்கி சுமக்கிறார்கள் அ.தி.மு.க எடப்பாடியும், ஒ.பி.எஸ்ஸும் . 

 

 

பணமதிப்பிழப்பினால் தமிழ்நாட்டில் 50 ஆயிரம் சிறுகுறு தொழில்கள் முடங்கிவிட்டது. 50 ஆயிரம் பேர் வேலை இழந்துவிட்டார்கள் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தொழில்துறை அமைச்சர் சொன்னார். அப்படி இத்தனை இழப்புகளை கொடுத்த பா.ஜ.க வுடன் கூட்டணி. 

 

 

கஜா புயல் வந்து ஒன்றரை கோடி தென்னை மரங்களும் மற்றும் பல மரங்களும், வீடுகளும், 89 பேரும் இறந்தார்கள். மோடி ஒரு இரங்கல் கூட சொல்லவில்லை. ஆனால் இப்ப ஓட்டுக்காக வந்து கொண்டே இருக்கிறார். தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவுக்கு என்னை தலைவராக நியமித்தார்கள். விவசாய கடன் ரத்து, மாதம் 6 ஆயிரம், கல்விக் கடன் என்று அறிக்கை தயாரித்தோம். 6 ஆயிரம் கொடுக்க முடியாது என்று பா.ஜ.க சொல்கிறது. முடியாது தான். அவர்களால் செய்ய முடியாது. ஆனால் காங்கிரஸ் கட்சியால் முடியும் செய்ய முடிந்ததை மட்டும் தான் சொல்வோம். 11 ஆண்டுகளுக்கு முன்பு விவசாய கடன் ரத்து என்றோம் செய்தோம். ஆனால் 5 ஆண்டுகளுக்கு முன்பு வங்கி கணக்கில் ரூ. 15 லட்சம் போடுவதாக சொன்னார்கள் செஞசார்களா? அதை கேட்டால் பதில் சொல்ல கூட மாட்டார்கள்.

 

 

ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா வாக்காளர்கள் முடிவு செய்துவிட்டார்கள் பா.ஜ.க வுக்கு 0 என்று தமிழ்நாடு வாக்காளர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். 40 பேரையும் அனுப்புங்கள் உங்களுக்கான திட்டங்களை கொண்டு வருவார்கள் என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்