திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணி ஒருவரின் 5 வயது குழந்தை சிறுமியின் தலை கம்பத்திற்கு இடையில் சிக்கிக்கொண்டு சுமார் ஒன்றரை மணி நேர போராட்டத்திற்கு பின் பாதுகாப்பாக மீட்கப்பட்டது.
திருத்தணி ரயில் நிலையத்தில் திருப்பதி செல்ல காத்து கொண்டிருந்த வேலு- மாலதி என்பவர்களின் ஐந்து வயது குழந்தை கீர்த்தனா ரயில்வே நடைமேடையிலுள்ள இருக்கையில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது கீர்த்தனாவின் தலை அருகில் இருந்த கம்பத்தின் இடையில் சிக்கிக்கொண்டது. இதனை அடுத்து குழந்தை கத்த ஆரம்பிக்க தயார் மாலதி அவரை மீட்க முயற்சித்திருக்கிறார். ஆனால் தலை நன்கு சிக்கிக்கொண்டதால் குழந்தை அழுத சத்தத்தில் கூட்டம் கூடியது. உடனே அங்கு வந்த பயணிகள் மற்றும் ரயில்வே ஊழியர்களின் உதவியால் குழந்தை சுமார் ஒன்றரை மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக குழந்தை மீட்கப்பட்டது.