Skip to main content

“மாணவர்களுக்கு ஏராளமான திட்டங்களை முதலமைச்சர் நிறைவேற்றவுள்ளார்” - அமைச்சர் பொன்முடி

Published on 18/06/2022 | Edited on 18/06/2022

 

"The Chief Minister will implement a number of projects for students" - Minister Ponmudi

 

சிதம்பரம் சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு இளங்கலை 606 பேர், முதுகலை 175 பேர், எம்.பில் 29  மாணவ மாணவிகள் என மொத்தம் 810 பேருக்குப் பட்டங்களை வழங்கினார். 

 

பின்னர் மாணவர்கள் மத்தியில் பேசுகையில், “இருமொழிக் கொள்கையைத் திராவிடம் மாடல் தான் கொண்டு வந்துள்ளது. ஒன்று தமிழ் இரண்டாவது ஆங்கிலம். நாம் தாய் மொழியைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியவர் முதல்வர் ஸ்டாலின். தமிழகத்தில் 31 கல்லூரிகளைத் தொடங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். நமது மாணவ மாணவிகள் உயர்கல்வி படிக்க வேண்டும் என்பதற்காக புதிய கல்வித் திட்டம்  கொண்டுவரப்படவுள்ளது. உயர்கல்வி படிக்கும் போது மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார். இதேபோல் பல திட்டங்களை முதலமைச்சர் மாணவர்களுக்காக நிறைவேற்ற உள்ளார். எனவே மாணவர்களாகிய நீங்கள் நன்கு படித்து முடித்து சமுதாய முன்னேற்றத்திற்குப் பாடுபட வேண்டும்” எனப் பேசினார்.

 

இவ்விழாவில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் சரவணன், மருதூர் ராமலிங்கம், கல்லூரியின் பேராசிரியர்கள், அலுவலர்கள், ஊழியர்கள், வேலூர் கல்லூரி கல்வி இயக்குநர் காவேரி அம்மாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  

 


சார்ந்த செய்திகள்