தேர்தல் அறிவித்தாலே எந்த ஒரு திட்டங்களையும் சலுகைகளையும் அரசு அறிவிக்கக் கூடாது என்பது தேர்தல் விதிமுறையும் கூட அப்படி இருக்கும்போது முதலமைச்சரின் விரிவான காப்பிட்டுத் திட்டம் மூலம் பொது மக்கள் பயனடைய வேண்டும் அதோடு மத்திய அரசின் PMJAY திட்டத்தையும் சேர்த்து பொதுமக்கள் செயல்படுவதின் மூலம் அனைத்து பயனாளிகள் குடும்பத்திற்கும் வருடத்திற்கு 5 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும். இதற்கு உண்டான செலவினங்களை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 22. 2. 2019 ஆம் தேதி கடிதம் எழுதி அதற்கு கீழ் உங்கள் அன்பு சகோதரன் எடப்பாடி பழனிச்சாமி என கையெழுத்து போட்டு இருக்கிறார்.
இப்படி எடப்பாடி தயாரித்த கடிதம் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே வெளியாகிவிட்டது. அதிலேயே முறைப்படி கொடுத்திருந்தால் இரண்டு நாளிலேயே தமிழகம் முழுவதும் உள்ள மக்களுக்கு போஸ்ட் ஆபீஸ்மூலமே கொடுத்திருக்கலாம். அப்படி இருக்கும்போது தற்பொழுது பாராளுமன்றத்துக்கான தேர்தல் தேதி அறிவித்து வேட்பாளர்கள் வாக்காளமக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வரும் நிலையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் முதல்வர் எடப்பாடி எழுதிய கடிதம் தேர்தல் கமிஷனின் விதிமுறைகளை மீறி பொதுமக்களுக்கு போஸ்ட் மேன்கள் வீடு தேடி சப்ளை செய்து வருகிறார்கள்.
இதில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு மட்டும் ஏழு லட்சத்திற்கும் மேல் முதல்வர் எடப்பாடி எழுதிய கடிதமான "முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம்" கடிதம் வந்ததின் மூலம் அதை அந்தந்த பகுதியில் உள்ள போஸ்ட் மேன்கள் வீடுகளில் சப்ளை செய்து வருகிறார்கள். அந்த கடிதத்தில் பொதுமக்களின் விலாசமும் சரிவர இல்லை பல கடிதத்தில் பெயர் மற்றும் தெரு விலாசங்கள் இருக்கிறதே தவிர டோர் நம்பர்களும் இல்லை. அது தெரியாமல் போஸ்ட்மேன்கள் ஒவ்வொரு பகுதியாக தேடி தேடி அலைந்து கொடுத்து வருகிறார்கள்.
இப்படி முதலமைச்சர் எடப்பாடி அறிவித்து எழுதி அனுப்பிய கடிதத்திற்கு தபால் செலவு 4 ரூபாய் வருகிறது. அதோடு கடந்த 28ஆம் தேதி வரை நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கடிதத்தை பொதுமக்களுக்கு கொடுத்து இருக்கிறார்கள். இப்படி தேர்தல் விதிமுறைகளை மீறி எடப்பாடி பொதுமக்களிடம் இந்த காப்பீட்டுத் திட்டம் முலமூம் ஓட்டு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்டு இருக்கிறார்.
இதுபற்றி திராவிட முன்னேற்றக் கழக துணைச் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஐ. பெரியசாமியிடம் கேட்டபோது...
இது பற்றி எனக்கும் பொதுமக்கள் மூலமாகவும் கட்சிகாரர்கள் மூலமாகவும் தகவல் வந்தது அதன் அடிப்படையில் அந்த முதல் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கடிதத்தை எங்கள் தேர்தல் பணிக்குழு மூலம் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான வினை இடம் கொடுத்து நடவடிக்கை எடுக்கச் சொல்லி வலியுறுத்தி இருக்கிறோம். அதோடு தலைமைக்கும் அந்த கடிதத்தை அனுப்பி சென்னையில் உள்ள தேர்தல் கமிஷனுக்கும் டெல்லியில் உள்ள தேர்தல் கமிஷனுக்கும் புகார் அனுப்புமாறு தலைவர் வரை வலியுறுத்தியிருக்கிறோம். இப்படி ஓட்டு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் எடப்பாடி விதிமுறைகளை மீறி பழைய தேதி போட்ட கடிதத்தை தேர்தல் நேரத்தில் பொதுமக்களிடம் கொடுக்கச் சொல்லி வலியுறுத்தி வருகிறார்கள்.
இப்படி எடப்பாடி செய்தாலும் கூட இந்த தேர்தலில் மக்கள் உதயசூரியனுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் தான்வாக்களிக்கப் போகிறோம் என்று முடிவு செய்துவிட்டார்கள் அதன்படி வாக்களிக்க தயாராக இருக்கிறார்களே தவிர எடப்பாடி கடிதத்தை எல்லாம் மக்கள் பெரிதுபடுத்த மாட்டார்கள்.
அதையெல்லாம் குப்பையில் தூக்கி போட்டுவிட்டு இந்த மத்திய அரசையும், மாநில அரசையும் வீட்டுக்கு அனுப்பி விட்டு மத்தியில் ராகுல் காந்திக்கு வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள். அதன்மூலம் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் அதன் மூலம் தலைவர் முதல்வராக பொறுப்பேற்று பொது மக்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் நிறைவேற்றி கொடுப்பார் என்று கூறினார்.
இப்படி முதலமைச்சரின் விரிவான மருத்துவ மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் எடப்பாடி எழுதிய கடிதம் திண்டுக்கல் மாவட்டம் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் விதிமுறைகளை மீறி அந்தந்த மாவட்டங்களில் உள்ள போஸ்ட்மேன்கள் வீடு தேடி சப்ளை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் இதை தடுக்க தேர்தல் கமிஷன் முன் வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.