Skip to main content

யானைக்கவுனியில் தமிழக முதல்வர் ஆய்வு

Published on 15/10/2024 | Edited on 15/10/2024
Chief Minister of Tamil Nadu inspects Yankauni

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவடை இருக்கிறது. இதன் எதிரொலியாக சென்னையின் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதேபோல் அக்டோபர் 16ஆம் தேதி டெல்டா மாவட்டங்களிலும், 17ஆம் தேதி ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூரில் அதிக கனமழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு முதலே சென்னையின் பல பகுதிகளில் கனமழையானது பொழிந்து வருகிறது.

இந்நிலையில் யானைகவுனி பகுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். வடசென்னை பகுதியான யானைக்கவுனி பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள மழைநீர் வெளியேற்றும் நடவடிக்கைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். உடன் அமைச்சர்கள்  கே.என்.நேரு, சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா மற்றும் அதிகாரிகள் இருந்தனர். தொடர்ந்து பேசின் பிரிஜ் பகுதியிலும் முதல்வர் ஆய்வு மேற்கொண்டார்.

சார்ந்த செய்திகள்