Skip to main content

பட்டு வேட்டி சட்டையில் முதல்வர்... களைகட்டும் செஸ் ஒலிம்பியாட்!

Published on 28/07/2022 | Edited on 28/07/2022

 

The Chief Minister in a silk shirt... weeding chess olympiad!

 

மாமல்லபுரத்தில் நடைபெறும் சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் இன்று (28/07/2022) தொடங்குகின்றன. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 350 அணிகள் பங்கேற்கின்றனர். ஆடவர் பிரிவில் 188 அணிகளும், மகளிர் பிரிவில் 162 அணிகளும் விளையாடவுள்ளன.  இந்தியா சார்பில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் தலா மூன்று அணிகள் களமிறங்குகின்றன.

 

ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில், நடைபெறவிருக்கும் தொடக்க விழாவில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார். இவ்விழாவில் ஏராளமான கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.  இதில் பங்கேற்பதற்காக அஸ்ஸாம், மணிப்பூர், உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து பெண்கள் வந்துள்ளனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி, பூஞ்சேரி மட்டுமின்றி சென்னை முழுவதுமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த நிகழ்வில் ரஜினிகாந்த், வைரமுத்து உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்கும் நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டு வேட்டி சட்டையில் மேடைக்கு வந்துள்ளார்.


சென்னை முதல் பூஞ்சேரி வரை கருப்பு, வெள்ளை சதுரங்கப் பலகைகளும், தம்பிக் குதிரைச் சின்னமும் கண்கவர் ஓவியங்களாக அலங்கரிக்கின்றன.கிழக்கு கடற்கரைச் சாலையில் 37 பேருந்துகளிலும், பழைய மாமல்லபுரம் சாலையில் 50 பேருந்துகளிலும் வீரர்கள்  வருகை புரிந்துள்ளனர். தப்பாட்டம், காவடி,பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.   

 

சார்ந்த செய்திகள்