தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில், நேற்று (14-12-2021) தமிழ் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 58,00,463 மகளிர் சுய உதவிக்குழுக்கள் சார்ந்த 7,56,142 பயனாளிகளுக்கு 2,749.85 கோடி ரூபாயில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மகளிர் திட்டத்தின் தனித்தன்மையை ஊக்குவிக்கும் வகையில் சுய உதவிக் குழுவினருக்கு வங்கிக் கடன் (ம) நலத்திட்ட உதவிகளைக் காணொளி காட்சி மூலமாக துவக்கிவைத்து வழங்கினார்.
இந்நிகழ்வில் சிறுபான்மைத்துறை மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், மாவட்ட ஆட்சியர் D. மோகன், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் இரா. இலட்சுமணன், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தி, திட்ட இயக்குநர் காஞ்சனா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ம. ஜெயச்சந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டனர்.