Skip to main content

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி ஆராய்ச்சி நடத்த முதல்வர் பழனிசாமி உத்தரவு!

Published on 26/08/2020 | Edited on 26/08/2020

 

Chief Minister Palanisamy orders to conduct corona vaccine research in Tamil Nadu!

 

 

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி ஆராய்ச்சியை நடத்த தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

 

தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவு தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கோவிஷீல்டு தடுப்பூசி ஆய்வை தமிழகத்தில் நடத்த முதல்வர் ஆணையிட்டுள்ளார். கோவிஷீல்டு தடுப்பூசி சோதனை செய்ய ICMR, DCGI சென்னையை தேர்வு செய்துள்ளது. சென்னை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, போரூர் தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி பரிசோதனை செய்யப்படும். சென்னையில் 300 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு சோதனை நடத்தப்பட உள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட ஆரோக்கியமான நபர்களிடம் தடுப்பூசி சோதனை மேற்கொள்ளப்படும். தேசிய காசநோய் ஆராய்ச்சிக் கழகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும் இணைந்து பரிசோதனையை மேற்கொள்ளும்.

 

Chief Minister Palanisamy orders to conduct corona vaccine research in Tamil Nadu!

 

மூன்றாம் கட்ட ஆராய்ச்சி நடத்தப்பட்டு விரைவில் தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். தடுப்பூசி டி- செல்கள் என்று அழைக்கப்படும் வெள்ளை அணுக்களை 14 நாளில் மனித உடலில் உருவாக்கும். வெள்ளை அணுக்கள் மனிதர்களில் உடலில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட செல்களை அழித்துவிடும். மேலும் 28 நாட்களுக்குள் நோய் எதிர்ப்பு சக்தியையும் மனித உடலில் உருவாக்கிவிடும்." இவ்வாறு அமைச்சர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள கரோனா தடுப்பூசியை பல்வேறு நாடுகள் சோதனை செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்