கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாகனங்கள் மூலம் பொதுமக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று விற்பனை செய்யும் வகையில் பல்வேறு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது.
இந்நிலையில், முழு ஊரடங்கில் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பது பற்றி முதல்வர் மு.க. ஸ்டாலின் அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகளுடன் தற்போது ஆலோசனை நடத்திவருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றுவரும் ஆலோசனையில் தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, வேளாண்மைத்துறைச் செயலாளர் கோபால் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆலோசனையில் காய்கறிகள் உள்ளிட்டவை தடையின்றி மக்களுக்கு கிடைக்க செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகள் குறித்து முதல்வர் ஆலோசனை நடத்திவருகிறார்.