கோவை வையம்பாளையத்தில் மறைந்த விவசாய சங்க தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களுக்கு மணிமண்டம் திறந்துவிட்டு, பேரூர் ஆதினம் சாந்தலிங்க அடிகளார் அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் புதிய மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிவிட்டு, மோப்பிரி மற்றும் கள்ளப் பாளையத்தில் நானூறு ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள கொடீசியா தொழில் பூங்காவுக்கு அடிக்கல் நாட்ட வந்தார். முதல்வர் எடப்பாடி அவருடன் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.சி.சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர்ராஜூ, பெஞ்சமின், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரும் கோவை மாவட்ட எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் முக்கிய நிர்வாகிகளும் வந்தனர். அதேபோல் பா.ஜ.க. தேசிய நிர்வாகிகளில் ஒருவரும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சருமான நிர்மலா சீதாராமன், பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகள்,அதிகாரிகள் என பலரும் வந்திருந்தனர்.
இந்த தொழில் பூங்காவால கோவை மேலும் டெவலப்பாகும் என மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூற முதல்வர் எடப்பாடி பின்னாள் இருந்த மாநில அரசு அதிகாரி நீங்க கொடுக்கிற இடத்துல இருக்கற வரைக்கும் நாங்க வாங்குற இடத்துல இருப்போம். அப்போது நிர்மலா சீதாராமன் அருகே இருந்த மற்றொருவர், "இல்ல... இல்ல... இப்ப டைம் வேற நீங்கதான் கொடுக்கிற இடம் நாங்க நீங்க கொடுக்கறத வாங்குகிற இடம் தான்" எனக் கூற மற்றொருவர் "நமக்குள்ள கொடுக்கல் வாங்கலெல்லாம் சகஜம்தானே..." என பளிச்சென தேர்தல் சென்டிமென்ட் பேச அப்போது குத்துவிளக்கு ஏற்றிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் குபீரென சிரித்தனர். அமைச்சர் வேலுமணியும் சிரித்தார் ஆனால் துணை சபா பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர் சம்பத் ஆகியோர் முகத்தை கடுப்பாக வைத்திருந்தார். உண்மைதான் பா.ஜ.க. கூட்டணிக்கு தொகுதிகளை அ.தி.மு.க. தானே கொடுக்கிறது அப்படியென்றால் இப்போது கொடுக்கல் அ.தி.மு.க. வாங்கல் பா.ஜ.க. இது தான் அர்த்தம் என மூத்த ர.ர.க்கள் அந்த இடத்திலே முனுமுனுத்து தலையில் அடித்துக் கொண்டனர்.