Published on 09/12/2021 | Edited on 09/12/2021

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (09/12/2021) சென்னையில் நடைபெற்ற திரைப்பட நடிகர் ரஹ்மானின் மகள் ருஷ்டா ரஹ்மான்- அல்தாப் நவாப் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பசுமைக் கூடை மரக்கன்றுகளை வழங்கி, மணமக்களை வாழ்த்தினார்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் மணமக்களின் குடும்பத்தினர் உடனிருந்தனர்.