Skip to main content

உலக காது கேளாதோர் விழாவில் கலந்துகொண்ட முதல்வர்! (படங்கள்)

Published on 25/09/2021 | Edited on 25/09/2021

 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காது கேளாதோர் வாரத்தையொட்டி மருத்துவமனைகளின் பயன்பாட்டிற்காக ரூ. 98.80 லட்சம் மதிப்புள்ள உயர்தர செவித்திறன் குறைபாடு கண்டறியும் கருவிகள் மற்றும் உயர்தர அறுவை சிகிச்சை கருவிகளை வழங்கினார்.

 

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நேற்று (24.09.2021) காலை 10.00 மணி அளவில் சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பெருக்கமரம் கல்வெட்டைத் திறந்துவைத்து, மக்களைத் தேடி மருத்துவ மையம் திறந்துவைத்து, உலக காது கேளாதோர் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

 

மேலும், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள ‘மக்களைத் தேடி மருத்துவம்’ மையத்தைத் திறந்துவைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்