சிதம்பரத்தில் மியான்மர் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பர்மா முஸ்லீம்களை இனப்படுகொலை செய்யும் மியான்மர் அரசை கண்டித்து. சிதம்பரம் காந்தி சிலை அருகில் கடலூர் தெற்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் ஆதம், செயலாளர் ஜின்னா உள்ளிட்ட 300 பேர் கலந்து கொண்டு முஸ்லீம்கள் மீதான இன அழிப்பை ஐ.நா.சபை தடுத்து நிறுத்தவும், இந்திய அரசு மியான்மர் அரசுக்கு எதிரான வலுவான கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும் என்று கோசங்களை எழுப்பினார்கள்.
-காளிதாஸ்